‘புதியவன்’ அறிமுகம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. பேய்கதைகள் மற்றும் பொழுதுபோக்காகப் பாட்டு பாடுவது போன்ற எளிமையான செயல்களுக்காக கிளப்ஹவுஸ் ஆகிய வாய்வழி இணையத் தளத்தில் சிலர் நேரத்தை செலவிட்டு வந்தார்கள். அவர்களே பிறகு ‘புதியவன்’ குழுக்களாக உருவாகினார்கள்.
அந்த குழுக்களில் ஒருவராக இருந்த யூசுப் ரியாஸ், பல ஓபன் ரூம்களில் என்ன பேசப்படுகிறது என்பதைக் கவனிக்கத் தொடங்கினார். பலரும் உலக அரசியல், மருத்துவம், சிந்தனைத் துளிகள், இந்திய மற்றும் தமிழக அரசியல் போன்ற தலைப்புகளில் விவாதித்து வந்தார்கள்.
அதில் ஒரு சாரார் குறிப்பாக இலங்கைத் தமிழர்களாகக் கூறப்பட்ட சிலர் தமிழ்நாட்டுக் குறித்து மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழக தலைவர்கள், அவர்களின் குடும்பங்கள் குறித்தும் அசிங்கமாக விமர்சனம் செய்தனர்.
யூசுப் ரியாஸ் இது குறித்து அப்போது எதுவும் பேசவில்லை. பொறுமையுடன் கடந்தார். ஆனால் இது மீண்டும் மீண்டும் நடக்க, அவர் அந்த ஓபன் ரூம்களில் சென்று தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினார். அவர்களின் முகநூல், ட்விட்டர் போன்ற பிற சமூக ஊடக செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
அங்கும் அதேபோல், இந்திய மற்றும் தமிழக அரசியல் சூழலைப் பொருட்படுத்தாமல், மிகவே மனமில்லாத, இழிவான வகையில், தமிழ்நாட்டுக்கு உழைத்த தலைவர்கள் குறித்து பேசும் போக்கு தொடர்ந்தது. இது யூசுப் ரியாஸுக்கு சகிக்கமுடியவில்லை.
அந்த இடத்தில் தொடங்கியது அவரது அறச்சீற்றம்.
அவர் உடனடியாக பேய்கதைகளில் ஈடுபட்ட குழுக்களிடம் சென்று, இந்த இலங்கை தமிழர்கள் எப்படி அரசியல் குறித்து இழிவாக பேசுகிறார்கள் என்பதைக் கூறினார். பின்னர், அவருடைய நண்பர்களை இலங்கைத் தமிழர்களின் அறையிற்குள் அழைத்து சென்று, அவர்களது பேச்சைக் கேட்கவைத்தார்.
அப்போது அவர்கள், தந்தை பெரியார் குறித்தும் மிகக் குற்றவுணர்வைத் தரும் விதமாக பேசினர். அவர்கள் கூறிய தவறான, தரங்கமற்ற கூற்று:
"பெரியார் ஈரோட்டில் கைவைக்காத பெண் இல்லை. அவர் ஒரு பெண் பித்தன்" என்று.
இத்தகைய அருவருப்பான, பொய்மையும் இழிவுமாகிய கூற்றுகள், எந்தவொரு சிந்தனையாளர் மீதும், தமிழ் சமூகத்தின் நெஞ்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
யூசுப் ரியாஸ் அதற்குப் பதிலாக, இந்த தவறான பேச்சுகளை வெளிக்கொணர்ந்து, எதிர்வினை தூண்டினார். அதன் பிறகே ‘புதியவன்’ ஒரு சமூக விழிப்புணர்வு இணைய இயக்கமாக உருவெடுத்தது.
ஆரம்பத்தில் இலங்கை தமிழ் பேசும் நபர்களுக்கு, அறிவுரை கூறும் விதமாக உங்களுக்கு எங்கள் நாட்டு அரசியலை குறித்து என்ன கவலை, அது எங்கள் பிரச்சனை, அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். தேவையில்லாமல் நீங்கள் எங்கள் நாட்டு அரசியலில் கருத்து சொல்கிறீர்கள் என்ற பெயரில் ஆபாச வசைபாடலை செய்யாதீர்கள். அவ்வாறு செய்கிற பட்சத்தில், பல நாடுகள் தடை செய்த விடுதலை புலிகள் என்ற அமைப்பை, அதன் செயல்பாடுகளை, மேலும் அதன் தலைவரை நாங்கள் பகுப்பாய்வு செய்வோம் என்று நேரடியாக அவர்களுக்கு சவால் விட்டோம். இங்கே ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கிறோம்: இலங்கை தமிழர்கள் என்றால் அவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்கள் அல்ல; அவர்கள் போர்க் காலங்களில் அகதிகளாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அசைலம் எழுதிக்கொடுத்து, "விடுதலை புலிகளால் எங்களுக்கு ஆபத்து" என்று முறையாக எழுதி ஆவணங்களை சமர்ப்பித்து அகதி அந்தஸ்து பெற்றவர்கள். அவர்களை டயஸ்போரா குழுக்கள் என்றும் கூறுவார்கள்.
அவர்கள் இது குறித்து காதுகொடுத்து கேட்பதாக இல்லை. மாறாக, அவர்கள் விடுதலை புலிகள் தோல்விக்கு தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களை "துரோகி" என்றே குற்றம் சாட்டினார்கள். மேலும், அவர் சார்ந்த திராவிடத் தலைவர்களை மிகவும் ஆபாசமாக பேசினார்கள். அங்கிருந்துதான் ‘புதியவன்’ ஒரு முடிவுக்கு வந்தது. நாம் இதைப் பற்றி பேசுவதைவிட, இலங்கையில் போர்க்களங்களில் இருந்த தமிழ் மக்களை அழைத்து பேசுவதும், அவர்களுடன் உரையாடுவதும், மேலும் விடுதலை புலிகள் பற்றி, அன்றைய காலங்களில் நடைபெற்ற அனைத்து செயல்பாடுகள் மற்றும் இதர இயக்கச் செயல்பாடுகளை ஆதாரபூர்வமாக பேச முனைந்தோம். அதற்கே நாங்கள் வைத்த பெயர் – புதியவன். புதியவனின் அறச்சீற்றம்.